இளங்கலை தமிழ் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்துறை இளநிலைப் பட்டப்படிப்பை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மொழிப்பாடமாய் தமிழை வழங்குகிறது. ...முன்னணி தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவது மற்றும் தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்பது துறையின் வழக்கமான அம்சமாகும். தமிழ்த்துறையானது தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மற்றும் புராதான சிறப்புகளையும் அறிந்து கொள்ளும் வகையில் தன் மாணவர்களை பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு கள ஆய்விற்காக அழைத்து சென்றது. இதன் வழியாக மாணவர்கள் தமிழரின் பெருமையும் சங்க காலம் மற்றும் கல்வெட்டு சிறப்புகளையும் அறிய கொண்டனர். பல்கலைக்கழக மானிய குழுவின் நிதி நல்கையுடன் "சங்க இலக்கியத்தில் நால்வகை பெண்டிர்" என்ற தலைப்பில் ரூ.1,45,000/- மதிப்பிலான குறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளிமையாக இலக்கணத்தை கற்பிக்கும் வகையில் அகப்புறச் செயல்பாடுகளை மேற்கொண்டனர். இதன் முயற்சியாக மாணவர்களுக்கு இலக்கணம் எளிமையாக புரிவதோடு தமிழ் இலக்கண சிறப்பையும் அறிய வழி வகை செய்தது.